ஸ்காபுறோவில் திருமதி விஜயா குலா வின் நிர்வாகத்திலும் பல தொண்டர்களின் கடுமையான ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக இயங்கிவரும் FRONTLINE COMMUNITY CENTRE நிறுவனம் நடத்திய கனடா தின விழா கடந்த சனிக்கிழமையன்று மார்க்கம் வீ;தியில் உள்ள FRONTLINE COMMUNITY CENTRE தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி கனடா தின வைபவத்திற்கு ஒன்றாரியோ மாகாண அமைச்சர் றேமன்ட் சோ மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் முக்கிய அமைச்சு ஒன்றின் பாராளுமன்றச் செயலாளருமான விஜய் தணிகாசலம் மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம். யுகம் வானொலி நிலையத்தின் அதிபர் கலைஞர் கணபதி ரவீந்திரன் ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
FRONTLINE COMMUNITY CENTRE சேவை வழங்கும் நிறுவனத்தில் தொண்டர்களாகவும் அங்கத்தவர்களாகவும் உள்ள பல மூத்தோர்கள் தங்கள் கலைத் திறமைகளையும் பேச்சாற்றலையும் அங்கு பார்வையாளர்கள் முன்பாக சமர்ப்பித்தனர்.
சில பெண்மணிகள் ஆற்றிய உரைகள் ஆழமான கருத்துக்கள் கொண்டவையாக விளங்கின என்றால் அது மிகையாகாது.