கனடா- மொன்றியால் வாழ் இளம் பாடகரும் தாயகத்தில் வாழும் கண்பார்வையற்ற சிறார்களுக்கும் உதவும் வகையில் செயற்படுகின்றவருமான கௌரீஸ் தனது தாயாருடன் இணைந்து வழங்கிய ‘விடியலைத் தேடி’ இன்னிசை நிகழ்ச்சியும் இசைத் தட்டு வெளியீட்டு நிகழ்வும் கடந்த 11ம் திகதி சனிக்கிழமையன்று மாலை கனடா ஶ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
கனடாவின் சிறந்த இசைக்குழுவான ‘மெகா ரியுனர்ஸ்’ நிறுவனர் அரவிந்தன் அவர்களின் இசையில் இனிய பாடல்களை இளம் பாடகர் கௌரீஸ் மற்றும் ஏனைய ரொறன்ரோ- மொன்றியால் வாழ் பாடக பாடகிகள் ஆகியோர் பாடி சபையோரை மகிழ்வித்;தார்கள்.
நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார் அறிவிப்பாளர் இளங்கோ அவர்கள்.
;விடியலைத் தேடி’ இசைத் தட்டின் வெளியீட்டு விழாவில் இசைத்தட்டு வௌியீட்டை உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர் பாரியார் ஆகியோர் வெளியிட்டு வைத்தார்கள். தொடர்ந்து இசைத்தட்டுப் பிரதிகள் பல அன்பர்களுக்கு
மேடையில் வழங்கப்பெற்றன.
மேற்படி இசைத் தட்டில் அடங்கியுள்ள பாடல்களை கனடா வாழ் கவிஞர் அகணி சுரேஸ் மற்றும் கவிஞர்கள் எழுதியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அங்கு சபையோர் மத்தியில் உரையாற்றிய இளம் பாடகர் கௌரீஸ் அவர்கள் தனது இசைப் பயணம் மற்றும் வாழ்க்கைப் பயணம் ஆகியவற்றுக்கு தனது தாயார் சாரதா அம்மையார் அவர்களே பக்கத் துணையாகவும் முதுகெலும்பாகவும் இருந்து வருகின்றார் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்த விடியலைத் தேடி’ இசை நிகழ்ச்சி சிறந்த முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகப் பிரமுகர்கள் கணக்காளர் குமார் தம்பியப்பா. சங்கர் நல்லதம்பி தம்பதி மற்றும் மெஜஸ்ரிக் சிட்டி தமிழர் உள்ளக அங்காடியின் பொது முகாமையாளர் கிறிஸ் சிவக்கொழுந்து ஆகியோர்க்குரிய கௌரவம் வழங்கப்பெற்றன.