(மன்னார் நிருபர்)
(14-07-2022)
நீண்ட நாட்களின் பின் மன்னாரில் இன்றைய தினம் வியாழக்கிழமை (14) காலை முதல் சீரான முறையில் 900 பேருக்கு லிற்றோ சமையல் எரிவாயு விநியோகிக்க பட்டுள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளரின் ஏற்பாட்டில் லிற்றோ சமையல் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் உள்ள முகவர்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து எரிவாயு விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக லிட்ரோ நிறுவன விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்தனர்.
அதற்கு அமைவாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு குடும்ப அட்டைகளின் படி இன்றைய தினம் வியாழக்கிழமை விநியோகம் இடம் பெற்றது.
முதல் கட்டமாக 900 எரிவாயு சிலிண்டர்கள் இவ்வாறு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் எரிவாயுவை பெற்று கொள்ள முடியாதவர்களுக்கு விரைவில் உள்ளூர் முகவர்கள் ஊடாக எரிவாயு விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சீரான முறையில் லிற்றோ சமையல் எரிவாயு மக்களுக்கு விநியோகிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.