ஒன்றாரியோ மாகாணத்தின பிரதி எதிர்க்கட்சித் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பெற்ற எம்பிபி டொலி பேகம்
ஒன்றாரியோ மாகாணத்தின பிரதி எதிர்க்கட்சித் தலைவியாக ஸ்காபுறோ தெற்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் சமூகத்தோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவருமான எம்பிபி டொலி பேகம் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளார்
மேற்படி பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பெற்றதை பாராட்டும் வகையில் உதயன் ஆசிரிய பீடம் அவரோடு தொடர்பு கொண்டு இந்த நியமனம் தொடர்பாக உரையாடியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
நீங்கள் எங்கிருந்து வந்தாலும் சரி, என்ன மொழி பேசுகின்றவருமக இருந்தாலும சரி. உங்களுக்கு நியாயம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்பு உள்ள ஒரு மாகாணத்தை உருவாக்க நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.” சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் ஒன்ராறியோவிற்கு வரும் அனைவருக்கும் ஆதரவாக தொடர்ந்து நிற்பேன் என்றும் உறுதியளிக்கிறார்.
ஸ்காபரோ தென்மேற்கு மாகாணத் தொகுதியைபபரதிநிதித்துவம் செய்யும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் டோலி பேகம் சமீபத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்ராறியோவில் வங்காளதேச வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணைத் தலைவர் பேகம், தனது அலுவலகத்தை dbegum-co@ndp.on.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுகலாம் என்றும் தெரிவித்தார்