இன்றைய தினம் துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட வறிய குடும்பங்களை சேர்ந்த 160 குடும்பங்களுக்கு கனடா வாழ் துணுக்காய் உறவான ஐயம்பிள்ளை நாகராசா அவர்களினால் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
பொருளாதார சூழ்நிலை காரணமாக சாதாரண வாழ்க்கை நிலை பாதிக்கப்பட துணுக்காய் பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவில் காணப்படும் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களின் ஜீவனோபாயத்தை முன்னேற்றுவதனை நோக்கமாக கொண்ட வகையில் ஐயம்பிள்ளை நாகராசா அவர்களுடைய எண்ணக்கருவிற்கு அமைவாக உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு துணுக்காயில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது