(15-07-2022)
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) மாலை இராணுவ மருத்துவமனைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 13ம் திகதி இரவு நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் வெடித்த வன்முறையின் போது இராணுவ வீரர்கள் சிலர் காயமுற்று இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்து, தற்போது ஓரளவுக்கு குணமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இன்றைய தினம் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ மருத்துவமனைக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு காயமடைந்து சிகிச்சை பெறும் இராணுவத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.