மன்னார் நிருபர்
(16-07-2022)
மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்டான்லி டிமல் அவர்களின் வழிநடத்தலில் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் தலைமையில் இன்று காலை 8.30 மணி முதல் நானாட்டான் மாந்தை முசலி போன்ற ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களுக்கான பெட்ரோல் எரிபொருள் சீராகவும் விரைவாகவும் எரிபொருள் அட்டையின் பிரகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நேர விரயம் செய்யும் செயல்பாடு இல்லை என்று எரிபொருள் பெற்றுக்கொண்ட சிலர் கருத்து தெரிவித்தார்கள்.
இந்த எரிபொருள் வழங்கும் செயற்பாடுகளின் போது அடையாளப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர்கள் முருகன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் போலீசார் தங்களுடைய கடமைகளைமேற் கொண்டிருந்தார்கள்
இனி வரும் காலங்களில் இதன் அடிப்படையிலேயே எரிபொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது