(மன்னார் நிருபர்)
(16-07-2022)
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(16) மாலை வவுனியா கோவில் குளம் கிராமத்தில் இடம் பெற்றது.
-மாணவர்களுக்கு சூழல் அறிவு மற்றும் சூழல் விழிர்ப்புணர் வை ஏற்படுத்தி மாணவர்களை சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும்,அவர்களுடைய ஆளுமைகளை விருத்தி செய்யவும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் தொடர்ச்சியாக குறித்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அங்கமாக நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை வவுனியா கோவில்குளம் கிராமத்தில் குறித்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.லோகேந்திரலிங்கம் கலந்து கொண்டார்.மேலும் விருந்தினர்களாக முன்னாள் ‘வீரகேசரி’ பிரதம ஆசிரியர் வி. தேவராஜ், கனடா உதயன் பத்திரிகையின் சென்னைப் பிரதிநிதி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்ட மாணவர்களுக்கு சூழல் பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் பதிக்கப்பட்ட அப்பியாச கொப்பிகள் விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை ரொறன்ரோவின் மனித நேயக் குரல்-கனடா வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.