திருநெல்வேலியிலிருந்து இ.பிரகாஸ்
கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் நூலகத்திற்கு சென்று அதன் நிர்வாகிகளையும் சந்தித்த கனடா உதயன் வார இதழின் பிரதிகள் சிலவற்றையும் நூலகத்திற்கு வழங்கினார்.
இங்கு காணப்படும் படத்தில் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சரும் தற்போதைய தலைவருமான திரு பொ. ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் திருநெல்வேலி கிராம சேவையாளரும் தற்போதைய நூலகருமான திரு நித்தி ஆகியோர் உதயன் பிரதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.