இலங்கையில் தற்போது நடக்கும்; நடக்க போகும் பாரிய வன்முறைகளை வன்மையாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சாப்பாக கண்டிக்கின்றோம். இலங்கை மணித்திரு நாடு சர்வதேசத்தில் தலைகுனிய காரணகத்தாக்கள் வியாபாரிகளாக இந்நாளில் தொழிற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களே. ஊடகவியலாளர்களைச் சீருடையினர் தாக்குவது நாட்டில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுதைக் காட்டுகின்றது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்புத் தேவையில்லை. சட்டத்தரணிகளைத் தாக்குவதும் கைதுசெய்வதும் நீதி குழி தோண்டி புதைக்கப்படுவதைக் காட்டுகின்றது. சமூக செயற்பாட்டாளர்களைத் தாக்குவது ஜனநாயகம் அழிக்கப்படுவதைக் காட்டுகின்றது. பெண்களைத் தாக்குவது தாய் நாட்டுக்குச் செய்யும் துரோகம் ஆகும், எனவே, அரசாங்கம் இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையாயின் நாடு எதிர் காலத்தில் பல பின்னடைவுகளைச் சந்திக்க நேரும்.
மக்களுக்குத் தொண்டு புரிய தெரிவுசெய்யப்பட்டவர்கள் மக்களைத் துன்புறுத்த வேண்டாம். மக்கள் இவ்வளவு காலமும் செய்தது போராட்டம் இனி செய்ய போவது முழு பாராளுமன்றத்திற்கு எதிரான புரட்சி அதை யாராலும் தடுக்க முடியாது. பாராளுமன்றத்திற்கு மனிதநேயம் மிக்க மனிதர்கள் போனால் மட்டுமே இலங்கை மணித்திரு நாடு பெருளாதார அரசியல் நெருக்கடிகளில் இருந்து விமோசனம் பெறும். இல்லையாயின், நாடு எங்கும் அமைதியின்மை ஏற்படுவதைத் தடுக்க முடியாது. சரியான தலைமைத்துவம் நாட்டைப் பொறுப்பேற்க வேண்டும்.
புயல்நேசன்,
உபசெயலாளர்,
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்.
22-07-2022.