(26-07-2022)
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று (26) சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அந்நிய நேரடி முதலீடு மற்றும் சுற்றுலாத் துறையில் விரைவான முதலீடு குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.
பிரதமரின் விசேட கோரிக்கையின் பிரகாரம், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மற்றும் இரயில் தலைமையிலான போக்குவரத்து அமைப்பின் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க உயர்ஸ்தானிகர் ஒப்புக்கொண்டார்.
தற்போதைய பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா செய்து வரும் மற்றும் தொடர்ந்தும் செய்து வரும் பங்களிப்புக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே காலங்காலமாக இருந்து வரும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவியேற்றதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்து கொண்டார்.