மன்னார் நிருபர்
(27-07-2022)
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சாக்கு முட்டை கடலில் மிதந்து வந்துள்ளது.
இதையடுத்து கடலோர காவல் படையினர் மிதந்து வந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்ததில் அதில் கஞ்சா பொதிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 50 கிலோ எப்படி கடலில் மிதந்து வந்தது? யாரேனும் கடத்தல் காரர்கள் ரோந்து கப்பலை கண்டதும் கடலில் போட்டுவிட்டு தப்பி சென்றார்களா? என்ற கோணத்தில் தீவிரமாக இந்திய கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த ப்ரீகபலின் 150 (MG) மில்லி கிராம் மாத்திரை சுமார் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகள். வள்ளத்தையும் கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ் ஜீவமணி தர்மராஜ் சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு பதிவு எண் இல்லாமல் இருந்த வள்ளத்தை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி வள்ளத்தில் உள்ளவர்கள் தப்பி சென்றதாக வள்ளத்தையும் பறிமுதல் செய்து. மாத்திரைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஓப்படைத்தனர்.
கஞ்சா புகையிலை மஞ்சள் ஏலக்காய் களைக்கொல்லி மருந்து என கடத்தி வந்த நிலையில் தற்பொழுது மாத்திரைகளையும் கடத்துவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.