யாழ்ப்பாணத்திலிருந்து சுகுணன்
சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் தமிழ் சிங்கள விரிவுரையாளர்கள் இணைந்த நடத்திய அரச எதிர்ப்பு கவனயீர்ப்புப் போராட்டம் தென்னிலங்கை மக்களையும் பல்வேறு பல்கலைக் கழகங்களின் விரிவுரையாளர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
ரணில் தலைமையிலான ஏமாற்று அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாண ய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் நண்பகல் 12 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றுகூடி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டப்போராட்டத்தில் தமிழ் சிங்கள மற்றும் இஸ்லாமிய விரிவுரையாளர்கள் ஆண்கள் பெண்கள் என முழுமையாகக் கலந்து கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களின் மேற்படிப் போராட்டத்தில் மக்களுடைய போராட்டத்துக்கு மதிப்பளி, நாட்டை கொள்ளை அடிக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற பதாகைகளை ஏந்தியவாறு விரிவுரையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்