மொரட்டுவை சொய்சா ராம விகாரையில் இருந்த இளம் பிக்கு ஒருவர் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கிய நிலையில் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக சொய்சா ராம மகா விகாரையின் பணிப்பாளர் தொடம் பஹல சுகுண நஹிமியன் தெரிவித்துள்ளார்.
பத்து வயதுடைய புலத்கம ஸ்ரீ விபூதி சாமனேர என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இளம் பிக்குவின் திடீர் மறைவு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விகாராதிபதி தேரர்,
நேற்று (27ம் திகதி) ரம்புட்டான் விதை ஒன்று சிக்கி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
விபத்து பிரிவில் இருந்து ரம்புட்டான் விதை அகற்றப்பட்டாலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.