ஜெகதீஸ்வரன் டிஷாந்த்
1 மணிநேர பணிப்புறக்கணிப்புடன் கூடிய ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இருந்த எரிபொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாரின் செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் மற்றும் ஒட்டிசுட்டான்,கரந்துறைப்பற்று,புதுக்குடியிருப்பு ,மணலாறு பிரதேச செயலகங்களிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது
இதே வேளை மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகங்களிலும் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றிருந்தது
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
“ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யாதே”
“அலுவலகத்தில் உட்புகுந்து பொருத்தமற்ற முறையில் கையாண்ட சகல தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”
“தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக ஊடகத்தை பயன்படுத்தாதே”
“பொதுமக்களை தவறாக வழிநடத்தாதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு பிரதேச செயலக வாயில்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிர்வாக செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் பொதுமக்கள் வெளியிலே காத்திருக்கவேண்டிய சூழ்நிலையும் காணப்பட்டது