மன்னார் நிருபர்
31-07-2022
மன்னார் டிலாசால் கிட் கெம்பஸ் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ஜோஹன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(31) காலை கிட் கெம்பஸ் பாடசாலையின் மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கொரோனா பொது முடக்கம், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலைகள் நீண்ட நாட்கள் நடை பெறாத நிலையில் பாடசாலை சிறுவர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக குறித்த விளையாட்டு விழா ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
குறித்த விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அருட் சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் மற்றும் அருட்சகோதரர் விஜயதாசன் உட்பட டிலாசால் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்
குறித்த விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு வெற்றி கிண்ணங்கள் வ, சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது