எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்துல் பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் எரிபொருள் களஞ்சியம் இருந்த இடத்தை தனியாருக்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1960ஆம் ஆண்டு 18 ஆண்டுகளிற்கு குத்தகை அடிப்படையில் மாவட்டச் செயலகத்தினால் பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் எரிபொருள் களஞ்சியத்திற்காக வழங்கப்பட்டு பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் களஞ்சியமாக விழங்கிய விழங்கியது.
இவ்வாறு இயங்கிய பெற்றோலிய களஞ்சியம் 1990ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமாகும் வரையில் செயல்பட்டு போரின் காரணமாக கைவிடப்பட்ட நிலத்தை அபகரித்து தனியார் ஒருவர் எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றை எவரது அனுமதியும் இன்று அமைத்துள்ளார்.
அவ்வாறு எரிபொருள் விற்பனை நிலையம் அமைத்துள்ள பகுதி தமக்குரியது எனவே அதனெ தமக்கு வழங்க ஆவண செய்யுமாறு 2014ஆம் ஆண்டு முதல் பெற்றோலியக் கூட்டுத் தாபனம் கோரிக்கை விடுத்து வருகின்றமையால் இந்தக் காணி தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த நிலத்தை அடாத்தாகப் பிடித்து எரிபொருள் விற்பனை நிலையம் அமைத்துள்ள தனியார் நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்ற தீர்மானமும் உள்ளது.
இருந்தபோதும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் ஆளுநருமான ஜீவன் தியாகராயா அந்த நிலத்தை தனியாருக்கு வழங்குமாறு மாவட்ட அரச அதிபரான ரூபவதி கேதீஸ்வரனிற்கு பரிந்துரைத்தாலும் மற்றுமோர் இணைத்தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த நிலத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதனால் மாவட்ட நிர்வாகம் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தடுமாறுகின்றது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கருத்துரைக்கும்போது,
மகிந்த அரசின் ஆட்சிக் காலத்தில் அவரோடு ஒட்டியிருந்த அவரது நாடாளுமன்ற உறுப்பினரின் சித்தப்பாவிற்கு வழங்கவே தற்போதைய ஆளுநரும் துடிக்கின்றார். பதவியில் நியமித்த விசுவாசமாகவே காணப்படுகின்றது. இந்த அரசியில்வாதிகளின் பகட்டு அபிவிருத்திக்கு இது நல்ல உதாரணம். இன்று அந்த நிறுவனம் அமைத்துள்ள எரிபொருள் விற்பனை நிலையம் 10 கோடி ரூபா என்றால் அபகரித்து வைத்துள்ள நிலம் 30 கோடி ரூபா பெறுமதியானது.
இது அரச காணி எந்த அனுமதியில் யாரது சிபார்சில் அடாத்தாக அபகரித்து கட்டப்பட்டது என்பதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க துப்பில்லாத ஆளுநர் அதிகாரிகளை பழிவாங்கவும், நிர்வகத்தை சீர் கெடுக்கவுமே வடக்கில் நியமிக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்த நிலத்தின் எதிர்த்திசையில் மக்களின் பயன்பாட்டில் இருந்த நூலகத்தை இராணுவம் பிடித்துள்ளது. இதனை அடாவடி அரசியல்வாதிகள் பிடித்துள்ளனர் இதுதான் தமிழ் மக்களின் அவலம் என்றார்.