வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
* ரணில்விக்ரமசிங்கவின் அக்ராஷன உரை ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகள்‘ என்பதை விரைவில் காலம் உணர்த்தும்.
* சூழ்நிலைகளின் கைதியான ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க ராஜபக்ஷக்களினதும் பொதுஜனபெரமுன கட்சியினதும் கடிவாளத்தை மீறி எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்?
தென்னிலங்கையின் அரசியல்வானில் கோலோச்சிய இளைஞர் யுவதிகளின் அரசியல் சாதனையை வெறும் நூறு நாட்களுடன் முடித்துவிட்டதாக தென்னிலங்கையின் அரசியல் சக்திகள் மார் தடடிக்கொண்டிருக்கின்றனர்.நூறு நாட்களுக்குள் தென்னிலங்கை அரசியல்வானில் பல சாதனைகளை இளைஞர் யுவதிகள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். தென்னிலங்கை மக்களின் அரசியல் அபிலாiஷகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இளைஞர் யுவதிகள்; தென்னிலங்கை மக்களின் மீட்பராக போற்றப்பட்டனர். அதேவேளையில் ஆhப்பாட்டக்காரர்கள் என்றும் கிளர்ச்சியாளர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டனர்.
தென்னிலங்கை இளைஞர; யுவதிகள் மக்களுடன் இணைந்து ஈட்டிய அரசியல் வெற்றிகள் தென்னிலங்கை அரசியல்வாதிகளை கிலி கொள்ள வைத்தது. பிரதம மந்திரி ஜனாதிபதி என அடுத்தடுத்து பதவி விலகினர்.குறிப்பாக ஜனாதிபதி நாட்டைவிட்டே தப்பியோட வேண்டிய நிலைக்கு ஆளானார்.மொத்தத்தில் தமக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்ற அளவுக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் முடங்;கிப் போயினர்.
போராட்டம் வெற்றி இலக்கை நோக்கி நகர்வதாக தென்னிலங்கை மக்களும் இளைஞர் யுவதிகளும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த வேளை ராஜபக்ஷ குடும்பமும் அவர்கள் நார்ந்த அரசியல் அணியினரும் தமக்கான மீட்பரைத் தேடினர். இந்தப் பயணத்தில் தென்னிலங்கை அரசியலில் ஏற்படப் போகும் மாற்றத்தால் தமது அரசியல் எதிர்காலமே பறிபோய்விடும் என்ற அச்சத்தில் இருந்த அனைத்து சக்திகளும் ராஜபக்ஷ குடும்பத்துடன் கைகோர்த்துக் கொண்டனர். இவர்கள் தமது பயணத்தைத் தொடர இலகுவாக ராஜபக்ஷக்களுக்கு நாடாளு மன்றில் இருந்த பெரும்பான்மை பலமும் அரசியலமைப்பு ஏற்பாடுகளும் கைகொடுத்தன.
69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை நாட்டைவிட்டு வெளியேற வைத்த இளைஞர் யுவதிகளும் தென்னிலங்கை மக்களும் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தாம் வழங்கிய மக்கள் ஆணை தமக்கெதிராகத் திருப்பப்படும் என எதிர் பார்க்கவில்லை. மக்கள் ஜனாதிபதியை நாட்டைவிட்டு அனுப்பிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த வேளை நாடாளு மன்ற உறுப்பினர்கள் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை கைகளில் எடுத்து அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கமைவாக தமக்கான ஜனாதிபதியைத் தெரிவு செய்து கொண்டனர்.
69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஆணை மூலம் மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் தேர்தலில் தோற்று தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ஒருவரை ஜனாதிபதி ஆக்கியுள்ளனர்.
தென்னிலங்கை மக்களும் இளைஞர் யுவதிகளும் எதிர்பார்த்து நிற்கும் மாற்றம் என்பது கடந்த 74 வருடமாக அரசியல்வாதிகள் கட்டிக்காத்து வருகின்ற அரசியல் கட்டமைப்பையே தகர்த்துவிடுவதற்குச் சமன். இந்தக் கட்டமைப்பால் இன்றைய அரசியயல்வாதிகளே கூடுதலாக நன்மை பெற்ற சலுகை பெற்ற சமூகமாக மேலெழுந்துள்ளனர்.குறிப்பாக ராஜபக்ஷக்களும் அவர்கள் சார்ந்த அணியினருமாகும். ஆரம்பத்தில் மாற்றத்தைக் கோரி நிற்போருடன் சமரசம் கண்டுவிடலாம் என்றே இந்தச் சக்திகள் எண்ணின. ஆனால் கட்டுமீறிப் போகவே இரும்புக் கரம் கொண்டு அடக்கக் கூடிய தமக்கான தலைவரைத் தேடிக் கொள்ள வேண்டிய கட்டா நிலைக்கு இந்தச் சக்திகள் தள்ளப்பட்டனர். இதன் விளைவே ராஜபக்ஷக்களுடன் கைகோர்த்துக் கொண்டு ரணில்விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளனர். அதாவது “DO OR DIE” என்ற நிலையில் தமதும் தமது அரசியல் வாரிசுகளினதும் அரசியல் நலன்களைக் காப்பாற்ற இணைந்துள்ளனர்.
ஜனாதிபதியை தெரிவு செய்யும் போது இரகசிய வாக்கெடுப்பைக் கோரியவர்கள் அவசரகாலச் சட்டத்திற்கான வாக்கெடுப்பில் துணிந்து வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். அது மாத்திரமல்ல பதுங்கி இருந்தவர்கள் எல்லோரும் வெளியில் வரத் தொடங்கிவிட்டனர். ஜனாதிபதி தெரிவுடன் ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என நெஞ்சை நிமிர்த்தி சென்றவர்கள் தலைமறைவாக வாழத்தலைப்பட்டுள்ளனர்.வெள்ளை வானும் படைத்தரப்பும் அவர்களை வலைபோட்டு தேடத் தொடங்கிவிட்டனர். பலர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டள்ளனர்.
மொத்தத்தில் தென்னிலங்கை மக்களின் மீட்பராக வலம் வந்தவர்கள் நூறு நாட்களுக்குள் கிளர்ச்சியாளராகவும் ஆர்ப்பாட்டக்காரர்களாகவும் சித்தரிக்கப்பட்டவர்கள் போராட்டம் நூறு நாட்களைக் கடப்பதற்குள் புதிய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அந்த இளைஞர் யுவதிகளுக்கு “Fascist“ என நாமம் சூட்டினார். தற்பொது தென்னிலங்கையில் மாற்றத்தைக் காணவிழைந்த இளைஞர் யுவதிகளும் தென்னிலங்கை மக்களும் ‘பயங்கரவாதிகளாக‘ சித்தரித்து அவசரகாலச் சட்டத்தின் கீழ் வேட்டையாடப்படுகின்றனர்.
ஆனால் தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் மக்கள் எதிர்பார்த்த நியாயமான மாற்றம் குறித்த கவலைகள் கரிசனைகள் பற்றி எவ்வித அக்கறையுமின்றி ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க உற்பட அனைத்து தென்னிலங்கை அரசியல் சக்திகளும் உள்ளனர்.
ஊழல் மோசடி நாட்டைக் கடடிச்சுவராக்கியவர்களுக்கெதிராக எந்தவித நகர்வுகள் குறித்தும் இந்தச் சக்திகள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
மக்கள் எழுச்சி ஏன் எற்பட்டது என்பது குறித்து சிந்திக்காது மக்கள் எழுச்சிக்கு ‘பயங்கரவாத முத்திரை‘ குத்தி அதனை எவ்வாறு அடக்குவது என்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
ரணில்விக்ரமசிங்க தம்மை ஜனாதிபதியாக்கிய சக்திகளின் விசுவாசியாக நலன்பேணுபவராக காட்டிக் கொள்வதில் காட்டும் அக்கறையானது அவரை இலங்கை வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயத்திற்குள்ளேயே தள்ளும். அவ்வேளையில் அவரால் காப்பாற்றப்பட்ட ராஜபக்ஷக்களும் அவரைத் தூக்கி வீசிவிட்டே செல்வர். இதுவே பொதுவான ‘அரசியல் தர்மமாக‘ உள்ளது.
ஏனெனில் ராஜபக்ஷக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பாற்பட்டவரே ரணில்விக்ரமசிங்க.
அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களை வலைவீசி பிடிக்க போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
– அண்மையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தபோது அலரிமாளிகையில் இருந்து இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சமையல்காரர் ஒருவர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து மின்சார இரும்பை அகற்றிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அரச கருவூலத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை திருடியவர்கள் இடம் பெயர்ந்து பாதுகாப்பாக இருக்க மற்றவர்களை சிறிய குற்றங்களுக்காக கைது செய்து வருகிறார்கள்!
ஆனால் பிரச்சனை என்னவென்றால் பொருளாதாரத்தை சீரமைக்கவும் மக்களின் துன்பத்தை போக்கவும் IMF மற்றும் உலக வங்கியின் உதவிகளை பெறுவதற்கு அவசரமாக என்ன செய்ய வேண்டும் என்ற முக்கிய விடயங்கள் அரசாங்கத்தின் முன் பெரும் சவாலாக நிற்கின்றது. ஆனால் அரசாங்கம் 74 வருடகால இலங்கை அரசியலில் மாற்றத்தை கோரி நிற்கின்ற தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள மக்களையும் (‘அரகலயா‘) அரசாங்கம் வேட்டையாடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை அமைக்கும் வரை இந்த நாட்டிற்கு எந்த புதிய நிதியுதவியையும் வழங்கப்போவதில்லை என்று உலக வங்கி கூறியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அரசாங்கம் தனது நடவடிக்கைகளை ஒன்றிணைக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக அது தனது அதிகாரத்தை பலப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது மற்றும் எதிர்ப்பாளர்களை பின் நின்று இயக்கியவர்கள் என இனங்காணப்படுவோரை அரசாங்கம் பழிவாங்குகிறது.
அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுடன் கலந்து கொண்ட திருடர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுத்து தமது திறமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருக்கும் காவல்துறை 17.8 மில்லியன் ரூபாய் பணக் குவியலைப் பற்றி பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஜனாதிபதி மாளிகை மற்றும் பொருட்கள் என்பன அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேறு யாருடைய வீட்டிலும் இவ்வளவு பெரிய தொகை பணம ;கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அது எவ்வாறு சம்பாதித்தது என்பதை காவல்துறை தெரிவிக்க வேண்டும். அது யாருடைய பணம் அது ஜனாதிபதி மாளிகையில் என்ன செய்து கொண்டிருந்தது? என்பது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அரசியல்; மாற்றத்துக்காக களத்தில் இறங்கிச் செயற்பட்டவர்களில் சிலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மாளிகையில் காணப்படும் கைரேகைகள் போன்றவற்றின் மூலம் அந்த இடங்களை முற்றுகையிட்டிருந்த ஏனைய எதிர்ப்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுப் பணத்தில் இருந்து திருடி பொதுமக்களின் பெயரில்; பல்வேறு மோசடிகளை நடத்தி பொருளாதாரத்தை சீரழித்து அதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் நெருக்கடிக்குள் தள்ளியவர்களைத் தொடர்ந்தும் அதிகாரத்தில் அமரவைத்து;ள்ளனர்.
மொத்தத்தில் இலங்கை அரசியலில் மாற்றத்தை நோக்கிய அலைக்குள் அள்ளுண்டு ‘பதுங்கியவர்கள்‘ பகிரங்கமாக நடமாடத் தொடங்க நெஞ்சை நிமிர்த்தி மாற்றத்தை நோக்கிப் பயணித்தவர்கள் பதுங்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அரச பயங்கரவாதம் அவர்களை வேட்டையாடத் தொடங்கிவிட்டது.
கடந்த காலத்தில் தமிழர்களை நோக்கி கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் தற்போது சிங்கள மக்களை நோக்கி திரும்பியுள்ளது.
இது தென்னிலங்கையில் ‘மாற்றத்தை காணச் சகிக்காத‘ அரசியல் சக்திகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் ஜனநாயக விரோத சக்திகளுக்கும் நாட தொடர்ந்தும் சூறையாட திறந்துவிட வழிவகுத்துள்ளது.
இவ்வேளையில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் அக்ராஷன உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார். அந்த உரை பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது. நம்பிக்கைகளைத் தருகின்றது. ஆனால் இவை அணைத்தும் ‘தகர்ந்து போகும் வாக்குறுதிகள்‘ என்பதை விரைவில் காலம் உணர்த்தும்.
சூழ்நிலைகளின் கைதியான ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க ராஜபக்ஷக்களினதும் பொதுஜனபெரமுன கட்சியினதும் கடிவாளத்தை மீறி எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பது கேள்விக்குறியே.
Email : vathevaraj@gmail.com
– பிழைக்கு மன்னிப்பு கோருகின்றோம்.
2020 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜ.தே.கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 30875 ஆகும் இது கொழும்பு மாவட்டத்தில் ஜதேக பெற்ற வாக்ககளில் 2.61 சதவீதமாகும். ஜதேக ஒரு ஆசனத்தைக கூடப் பெறவில்லை என்பதால் விருப்பு வாக்குகள் எண்ணுவது தேவையற்றது என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தவாரக் கட்டுரையில் வெளியாகி இருந்த புள்ளிவிபரம் தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். பிழைக்கு வருந்துகின்றோம். மன்னிப்பு கோருகின்றோம் – வி.தேவராஜ்