மன்னார் நிருபர்
(05-08-2022)
பேசாலை காட்டாஸ்பத்திரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் டீசலை பெறுவதற்காக வாகனங்கள் வரிசையில் நின்ற நிலையில் பேசாலை மக்களின் பலர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒன்றுகூடி தங்களது தொழில் நடவடிக்கை ஈடுபடுவதற்கான எரிபொருளை கொடுக்குமாறு கோரியிருந்தனர்.
ஆனாலும் அவர்களுக்கான முறமை இல்லாது QR சிஸ்டம் முறையாக எரிபொருள் வழங்கப்படும் என தகவல்கள் வழங்கப்பட்ட நிலையில் மீனவர்கள் பலர் வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
பின்னர் குறித்த அதிகாரிகளுடன் பேசி அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட தொகை எரிபொருள் கொடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் பதற்றநிலை குறைவடைந்து .
அதிக அளவில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இருக்கும் இந்த பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகம் காணப்படுவதால் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.