12-08-2922 கதிரோட்டம்
‘கொலை வெறி’, ‘பதவி வெறி’ அத்துடன் ‘பண வெறி’ ஆகியவற்றுக்கு அடிமையாகி திடீரென தேசத்தின் தலைவனாகத் தோன்றி. தான் தோன்றித் தனமாக ஆட்சியை நடத்திய கோட்டாபாய என்னும் இனக்கொலையாளியை அவரது இனம் சார்ந்த சிந்தனையாளர்கள் இணைந்து நாட்டை விட்டு துரத்தியடித்தனர்.
மாங்கனித் தீவாம் இலங்கையின் ஆட்சி பீடத்தில சகோதரர்கள் சகிதம் அமர்ந்திருந்து. மக்கள் நலன் பார்க்காமல் மமதையுடன் ஆட்சி செய்த ராஜபக்ச சகோதரர்களில் மூத்தவராக விளங்கிய கோட்டாபாயவின் ‘கொட்டத்தை’ அடக்கினார்கள் தென்னிலங்கையின் வீரப் புதல்வர்களும் புதல்விகளும்.. அவர்களில் பல்கலைக் கழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அடக்கப்பட்டு வாழ்ந்து வந்த அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களாய் தலைநகரின் வீதிகளிலே கோசங்களி எழுப்பிய வண்ணம் கொடிகளைப் பிடித்த வண்ணம் பவனி வந்தார்கள். அவர்கள் கைகளில் சிங்கக் கொடிகள்’ பறந்து கொண்டிருந்தாலும் அவர்கள் இனவாதிகளாக தமிழ் மற்றும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுக்குத் தெரியவில்லை. இனங்களுக்கிடையில் உள்ள குரோதங்களைக் களைந்து விட்டு மத ஐக்கியம் பேணும் மக்களாக வாழ வேண்டும் என்ற தலையாய கோசம் அவர்கள் வாய்களிலிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
இவ்வாறான ஆர்ப்பாட்டம் செய்த அந்த தென்னிலங்கைப் போராளிகளின் எதிர்ப்புக்களை தாங்கிக் கொள்ள இயலாமல் தனது அட்டகாசமான ஜனாதிபதி மாளிகையையிலிருந்து தப்பி ஓடினார்கள். கோத்தாபாயவும் அவரது மனைவியும். பதவியை இராஜினாமாச் செய்தாலும் பகட்டான இராஜதந்திரி என்ற அந்தஸ்த்து மிகுந்த கடவுச் சீட்டுடன் கோட்டாபாய தம்பதி முதலில் சிங்கப்பூர் நாட்டில் கால்பதித்தார்கள. அரசின் பாதுகாப்பும் வசதிகளும் கிட்டின அவர்களுக்கு..
சிங்கப்பூர் தேசமானது முன்னேற்றமான கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் நாடாக விளங்கினாலும் தங்கள் வர்க்க நேசத்தை காட்டும் வகையில். தனது சொந்த நாட்டு மக்களையே இனப்படுகொலை செய்த ஒரு கொலையாளியயு அதுவும். இலங்கை என்னும் வளமிக்க தேசத்தை ‘ வங்குரோத்து’ நிலைக்கு கொண்டு சென்று.
தான் கொள்ளையடித்த கோடிகள் ரூபாய்களை டாலர்களாக மாற்றி உலகையே ஏமாற்றிய ஒரு மோசக்காரனுக்கு’ தங்கள் நாடுகளில் அடைக்கலம் கொடுக்க அந்த சில நாடுகள் தயாராக இருந்ததற்கு காரணம், ஆளும் வர்க்கத்தவராகிய கோட்டாபாயவை நிராகரித்து விடக் கூடாது என்ற ஒன்றே ஆகும்.
இவ்வாறான நிலையில் தான் தங்கியிருந்த சிங்கப்பூர் நாட்டில், தங்கியிருக்கக் கூடிய சில மாதங்கள் கழிய தற்போது. தாய்லாந்து நாட்டில் சில மாதங்களுக்கு தஞ்சம் புகுந்து கொள்ள வேண்டிய ஒரு ‘கட்டாயம்’ கோட்டாபாயவிற்கும் அவரது மனைவிக்கும் தோன்றியுள்ளது. கொரூர கொலைவெறி கொண்ட கோட்டாபாய தம்பதி தாய்லாந்து விமான நிலையத்தில் கால் பதித்து ‘பயம் கலந்த விழிகளுடன் செல்வதைப் பார்த்து நாம் ஒன்றைத் தீர்மானிக்கலாம். இலங்கையின் இனவாத சிங்களக் கட்சிகள் இரண்டையும் தென்னிலங்கை மக்களோடு இணைந்து அவர்களை ‘வீட்டுக்கு’ அனுப்ப பாதிக்கப்ப்ட்ட அனைவராலும் முடியும் என்றே நாம் நம்பலாம்.
‘கொலையாளி’ கோட்டாபாயவை ஆதரிக்கும் அவர் சார்ந்த நாடுகளும் சகாக்களும் போன்று ஈழத்தமிழர்களாகிய நாம் தென்னிலயில் தொடர்ச்சியாக தோன்றியிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு எமது வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கின்றோம்.