கனடாவில் ‘மாவிலி மைந்தன்” எனும் புனைபெயரைத் தாங்கி. கலை இலக்கியம் மற்றும் கவிதை இலக்கணம் ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் கவிஞர் சண்முகராஜாவின் ‘மனவெளி மேகங்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 06-08-2022 அன்று சனிக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெற்றது.
கவிஞர் சண்முகராஜா அவர்களின் புதல்வர் நீதன் சண்முகராஜா அவர்கள் அன்றை விழாவை தொகுத்து வழங்கினார்.
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து கவிஞர் சண்முகராஜா அவர்களின் அன்புப் பேரர்களான கவின். எல்லாளன் அர்ஜன். கரிகாலன் ஆகியோர் கனடிய தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து ஆகியவற்றை இசைத்தனர்
தொடர்ந்து இறைவணக்கப் பாடலாக கவிஞர் சண்முகராஜா அவர்கள் யாத்த முருகக் கடவுக்கான பாடலை அவரது பேரர்களில் ஒருவரான சந்தோஷ் பாடினார். இந்த பாடலுக்கு இசையமைத்தவர் சி. சுதர்சன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ‘கலைக்கொவில் நாட்டியக் கல்லூரி மாணவிகள் செல்விகள் அஸ்வினி. அனுசியா, ரித்திகா மற்றும் மாயா ஆகியோர் வழங்கிய தமிழ்த் தாய் வணக்க நடனம் இடம்பெற்றது
அமரர் பண்டிதர் ம. செ. அலெக்சாண்டர் அவர்களின் நினைவாக அவரது கவிதைத்துறை பங்களிப்பு தொடர்பான காணொளி ஒளிபரப்பாகியது தொடர்ந்து வாழ்த்தரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து இடம்பெற்ற ஆய்வரங்க அரங்கிற்கு கவிஞர் அகணி சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். அதில் மனவெளி மேகங்கள்’ நூல் தொடர்பான ஆய்வுரை. வெளியீட்டுரை நூல்வெளியீடு வாழ்த்து மடல்கள் வழங்குதல் இடம்பெற்று இறுதியில் கவிஞர் சண்முகராஜா அவர்களின் ஏற்புரை இடம்டபெற்றது. சிறப்புப் பிரதிகளையும் ஏனைய பிரதிகளையும் சபையில் அமர்ந்திருந்த அனைவரும் பெற்றுக்கொண்டு கவிஞர் சண்முகராஜா அவர்களுக்கு தங்கள் ஆதரைவை வழங்கினர்.
அன்றைய நிகழ்வானது இனிதானதும் கனதியானதுமானதுமான ஒரு இலக்கிய விழாவாக அமைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
– சத்தியன்