தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் இயற்கையான முறையில் செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய அறுவடை விழா இன்று(17) மாலை 3.00மணிக்கு இடம்பெற்றது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
மேலும் அதிதிகளாக மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளரும், உற்பத்தித் திறன் பிரிவின் பிரதம இணைப்பாளருமான கே.லிங்கேஸ்வரன், துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா, உலக உணவுத் திட்டத்தின் மாவட்ட இணைப்பதிகாரி ஜெயபவாணி, வவுனிக்குள நீர்ப்பாசன பொறிறியலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்திற்கு அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பை முன்மாதிரியாக எடுத்துக்காட்டுமுகமாகவே குறித்த பிரதேச செயலக வளாகத்தில் இயற்கை விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.