கனடாவின் Mr. Tamil Canada அமைப்பு Mr. Tamil International என்ற பெயரில் விரிவாக்கம் பெறுகின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை அண்மையில் அறிவித்தது. இதனை அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் கனடாவில் கடந்த 6ம் திகதி நடைபெற்ற மாபெரும் இசைப் பெருவிழாவில் பெருமையுடன் அறிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவில் இயங்கி வரும் Mr. Tamil Canada அமைப்பு எமது மக்களிடையே மன அழுத்தத்தினால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் முகமாகவும் அதுபற்றி மக்கள் புரிந்து கொள்ளும்வகையிலும் “பேசா பொருள் பேசுக” என்கின்ற வாசகத்தினை மையமாக வைத்து பல நிகழ்வுகளை நடாத்தி வருவதை நீக்கல் அனைவரும் அறிந்ததே. இந்த மக்களின் புரிந்துணர்வு கனடாவையும் தாண்டி தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பல நாடுகளுக்கும் எடுத்து செல்லப்படவேண்டிய தேவையோடு மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஓர் மிகப்பெரிய தொடர்பு கொண்ட சமீகமாக எமது இனத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கோடு Mr. Tamil International என்கின்ற பெயர் கொண்டு 2022 ம் ஆண்டு முதல் வளர்ச்சி கண்டுள்ளது. தனியே மன அழுத்த சார்ந்த பிரச்சனைகளை மட்டுமன்றி மாணவர்களின் பரிமாற்றம், இளைஞர்களின் வேலை வாய்ப்புகள், வர்த்தக பரிமாற்றங்கள் மட்டும் கலை கலாச்சார உறவுகள் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கோடு “தமிழால் இணைவோம், தலை நிமிர்த்து தமிழராய் வாழ்வோம்” என்கின்ற கருத்தை மையமாக வைத்து செயற்பட ஆரம்பித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை திரு. குலா செல்லத்துரை ஏற்றுள்ளார். திரு B. H அப்துல் ஹமீது அவர்கள் இந் நிறுவனத்தின் சர்வதேச தூதுவராக இயங்குகின்றார். இவர்கள் அடுத்த ஆண்டு உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் வர்த்தக நிறுவனங்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமாண்டமான World Tamil Expo ஒன்றினையும் கனடாவில் ஒழுங்கு செய்ய தீர்மானித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது