(மன்னார் நிருபர்)
(23-08-2022)
மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை(23) காலை மன்னாரில் இடம் பெற்றது.
-மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், அதன் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் , மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
-குறித்த கலந்துரையாடலில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொறியியலாளர் சங்க பிரதிநிதிகள், மீனவ அமைப்பு, மத தலைவர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மன்னார் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக கனிய மணல் அகழ்வு மற்றும்,காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமை குறித்து ஆராயப்பட்டது.
மேலும் மன்னாரில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இவ்விடயம் குறித்து மௌனம் காத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
-குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கனிய மணல் அகழ்வு மற்றும்,காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை(29) மாவட்ட ரீதியில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு,மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ரீதியாக விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து,அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை கூற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும்,காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படாது விட்டால் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.