இரட்ணம் பவுண்டேசன்-UK மற்றும் செல்வநாயகி மகாலிங்கம் குடும்பத்தவர்களின் நிதிப்பங்களிப்பில் திறன் வகுப்பறை ஒன்று கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் சென்ற வெள்ளிக்கிழமை (19/8) விமரிசையாகத் திறந்து
வைக்கப்பட்டது.
இப்பாடசாலையின் அதிபர் திருமதி கவின்ஜா நவஜீவா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரிகளின் முந்நாள் அதிபர் திரு.அ.பஞ்சலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயத்தின் முந்நாள் வலயக்கல்விப்பணிப்பாளரும் IMHO-USA அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளருமாகிய திரு.சு.கிருஷ்ணகுமார் அவர்களும் கெளரவ விருந்தினராக கோப்பாய் மற்றும் நல்லூர் கோட்டக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றும் திரு.என்.சிவநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை இவ்விழாவை சிறப்புற வைத்திருந்தது.
இவ்விழாவில் இரட்ணம் பவுண்டேசன்-UK ஸ்தாபகர் கலாநிதி இரட்ணம் நித்தியானந்தன் அவர்கள் ஆற்றிவரும் மனித நேய அர்ப்பணிப்பான சேவைகளுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.மட்டுமன்றி இவ்விழாவில் கலந்து கொண்டிருந்த ஆரம்பக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் பலகையை கையாள்வது தொடர்பான வழிகாட்டல்கள் விருந்தினர்களால் வழங்கப்பட்டது.இறுதியில் தேசிய மட்டத்தில் பரிசில்கள் பெற்ற இப்பாடசாலையின் இருமாணவர்களும் விருந்தினர்களால் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்திருந்தது .