மன்னார் நிருபர்
(26-08-2022)
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் 26 வயதுடைய சந்திர பாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை (24) குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
























