அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் மதுரை மாநகராட்சியில் மேயராக உள்ள இந்திராணி நிதியமைச்சரின் நிழலாக தான் செயல்படுகிறார். நிதியமைச்சர் கீ கொடுத்தால் மட்டும்தான் அவர் செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு அரசு செயல்படாத அரசாக உள்ளது திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒன்றும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றும் பேசி வருகிறது. தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் சிங்கமாக செயல்படுவதாக கூறும் முதல்வர் பிரதமரை சந்திக்கும் போது பணிந்து செயல்படுகிறார். முதலமைச்சர் விளம்பரம் தேடாமல் மக்களுக்காக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார். மேலும் 2026 நிச்சயமாக அதிமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.