மன்னார் நிருபர்
(31/08/2022)
மன்னார் மாவட்டத்தில் பழைய சதோச கட்டிடத்திற்கு முன் பகுதியில் பல வருடங்களாக தள்ளுவண்டியில் சர்பத்,பழகலவை மற்றும் குளிர்பானம் விற்கும் சிறு வர்த்தகம் செய்யும் ஒரு அன்பரின் மகள் உயிர்முறைமையியல் தொழில் நுட்பபிரிவில் மூன்று A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 85 வது இடத்தையும் பெற்றும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த மொஹமட் பாருக் பாத்திமா வாஸ்மியா மன்/அல்ஹஸ்கர் பாடசாலையில் கல்வி கற்றுவந்த நிலையில் 2021 ஆண்டு இடம் பெற்ற உயர்தர பரீட்சையில் உயிர்முறைமையியல் தொழில் நுட்பம்- A சித்தி,மனை பொருளியல்- A சித்தி,தொழில் நுட்பத்திற்கான விஞ்ஞானம்-A பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐந்து பிள்ளைகளை கொண்ட மிகவும் குறைந்த வருமானமுடைய குடும்பத்தை சேர்ந்த பாத்திமா வாஸ்மியா வீட்டில் மூன்றாவது பிள்ளையாவர்.
இவரது தந்தை தள்ளுவண்டியில் குளிர்பானம் விற்பனை செய்தும் சர்பத் விற்பனை செய்தும் கிடைக்கின்ற வருமானத்தில் குடும்பத்தினை கொண்டு சென்றதுடன் பிள்ளைகளை சிறப்பாக கல்வியில் முன்னேற்றியிள்ளார்.
பாத்திமா வாஸ்மியாவுடன் சேர்த்து இத் தந்தையின் மூன்று பிள்ளை இதுவரை பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.