கடந்த செப்ரம்பர் 3ம் திகதி சனிக்கிழமையன்று கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கொல்மோன் என்ற நகரில் தமிழர் மரபுக் கலையகத்தினரல் ‘பறைத் திருவிழா வெகு விமர்சையாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது
இந்த பறைத் திருவிழாவில் பல நகரங்களிலும் சென்று நூற்றுக்கும் அதிகமானேர் பங்கு பற்றினர். மேற்படி பறைத் திருவிழா வெற்றிபெற நடைபெற பலர் உழைத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி ‘பறைத்திருவிழாவில் நாடுகடந்ந தமிழீழ அரசாங்கத்தின்
பெண்கள் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு அமைச்சர் இந்துமதி கிருபசிங்கம் அவர்கள் வாழ்த்தும் , பாராட்டுகளும் தெரிவித்ததுடன் நாடுகடந்த அரசாங்கம் சார்பில் திரு மகாஜெயம், விஜிதரன் ஆகியோர் தமது குடும்பங்கள் சகிதம் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளர்களுனும் கலந்து சிறப்பித்தனர்.