ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா செல்லவுள்ளார்.
பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
17 அல்லது 18 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.