இலங்கையிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் கடற்படையனரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, கல்குடா கடற்பரப்பில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 11 சிறார்கள், 14 பெண்கள் உட்பட 85 பேரும் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
கைதானவர்கள் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர், சட்ட நடவடிக்கையின் நிமித்தம் பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.