(மன்னார் நிருபர்)
(12-09-2022)
தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி 06 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை(12) மன்னார் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் (28) ஆம் திகதி காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை(12) ரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (12) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்கள் 6 பேரையும் 3 வருட சிறைத்தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் எதிர் வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி படகு உரிமையாளர்களுக்கான வழங்கு விசாரணை இடம் பெறும்.
அன்றைய தினம் படகு உரிமையாளர் மன்றில் சமூகமளிக்காவிட்டால் படகு அரசுடமையாக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.
-மேலும் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக மிகிரியாகம முகாமிற்கு அனுப்பி நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.