(13-09-2022)
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை(13) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தில் இன்று காலை சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பிரதேச வாசிகள் இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின் படி இறந்தவர் 45 வயது மதிக்கத்தக்க ஆண் என்று தெரிய வருகிறது.
மேலும் நேற்றைய தினம் திங்கட்கிழமை(12) இரவு வேளையில் ரயிலில் மோதுண்டு இரு கால்களும் துண்டிக்கப்பட்டதால் கடும் இரத்தப்போக்கு காரணமாக மரணித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதேவேளை அவருக்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.எனினும் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.