வட-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி ஜாட்சன் பிகிராடோ
(14-09-2022)
வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவது மற்றும் அவர்களின் அலுவலகங்களை உடைத்து சேதப்படுத்தும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோரியும் ,குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(14) காலை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவது மற்றும் அவர்களின் அலுவலகங்களை உடைக்கப்பட்டு,அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்கள் குறித்து அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ் விடையங்களில் சர்வதேசம் எமக்காக குரல் கொடுக்க வேண்டும்.
வட கிழக்கில் வாழ்கின்ற மக்கள் கௌரவமான உரிமைகளுடன் வாழ வேண்டும்.அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
அர வழி போராட்டக்காரர்களை கைது செய்து அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டிப்பது ஆபத்தான விஷயம்.வடக்கு கிழக்கில் சுமார் 30 வருடங்களுக்கு மேல் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பாதீக்கப் பட்டவர்களும் உள்ளனர்.
அவர்களின் வலியும்,வேதனையும் எமக்குத் தான் தெரியும்.எனவே பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
சர்வதேசம் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நாம் எதிர் பார்க்கின்ற நல்ல செய்தி எம் மக்களுக்கு கிடைக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளையும் நாம் வலியுறுத்தி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை நாம் முன்னெடுத்தோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.