(13-09-2022)
யாழ் மறைமாவட்டத்தின் முதலாவது சுதேச ஆயராக பணியாற்றிய ஆயர் அதிவண எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை யாழ் புனித மரியன்னை பேராலய வளாகத்தில் நடைபெற்றது.
யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து சிறப்பித்த துடன் அமரர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் உருவச்சிலையை திரை நீக்கம் செய்து வைத்தார்.
யாழ் மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்திரு இம்மானுவேல் அடிகளார்; எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் பணிகள் அடங்கிய நினைவுக் கல்லை திறந்து வைத்தார்.
அமரர் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை அவர்களின் மறைவின் 50 வது ஆண்டு நிறைவில் முன்னெடுக்கப்பட்ட இந் நிகழ்வில் குருக்கள், துறவிகள் ,இறைமக்களென பலரும் பங்கெடுத்தனர்.