(மன்னார் நிருபர்)
(14-09-2022)
தலைமன்னாரில் இருந்து இன்று புதன்கிழமை(14) காலை 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த அரச பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
-தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் பயணித்த குறித்த அரச பேரூந்து மன்னார் பிரதான பாலத்தடியில் நிறுத்தப்பட்டு இராணுவத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
-இதன் போது குறித்த பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்ட சிறிய பொதியை சோதனையின் போது மீட்ட இராணுவத்தினர் குறித்த பொதியை சோதனை செய்தனர்.
இதன் போது குறித்த பொதியில் ஐஸ் ரக போதைப்பொருள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 250 கிராம் எடை கொண்ட ஐஸ் ரக போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஐஸ் ரக போதைப்பொருள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.