போற்றுதற்குரிய கண் சிகிச்சை நிபுணர் சிவபூமி அறக்கட்டளை பொருளாளர் மன விருத்தி தேவைப்பாடு குழந்தைகளின் நல்வாழ்வில் குடும்பத்தையே அர்ப்பணித்த மருத்துவர் குகதாசன் ஐயா சிவனடி சார்ந்தார். 2 தசாப்த்திற்கு மேலாக தனியொரு கண் நிபுணராக குடாநாட்டிற்கு அரும்பணி ஆற்றியவர். கண்தானத்தை ஊக்குவித்தவர். இவரது காலத்தில் போர் கால சூழ்நிலையில் எமது அப்பப்பா, அம்மம்மா இருவரது கண்களும் கண் பார்வையிழந்தோருக்கு கண் மாற்று சத்திர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டதை நன்றியோடு நினைத்து பார்க்கின்றோம்.
மருத்துவர் குகதாசன் அவர்களது மறைவு குறித்து தனது அஞ்சலிக் குறிப்பில் திரு ஆறுதிருமுருகள் அவர்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளார்;-
“உன்னத மருத்துவப் பணிக்கு மேலாக ஆரம்பித்த காலம் முதல் சிவ பூமி பணிகளிற்கு குறிப்பாக மனவிருத்தி தேவைப்பாடுடைய குழந்தைகளின் நல்வாழ்விற்கு தம்மையும் பாரியாரையும் குடும்பமாக அர்ப்பணித்து தம் உடல், பொருள், ஆவி ஈந்த உத்தமர் .
ஆரவாரமில்லாமல் மருத்துவப் பணியும் சிவப்பணியும் அறப்பணியும் ஒருங்கே ஆற்றிய உத்தமர் இறை சிவனின் நிழலில் பேரின்ப பெருவாழ்வு பெறட்டும். குடும்பதாரின் துயரில் பங்கேற்கின்றோம்.”
மறைந்த மருத்துவர் குகதாசன் அவர்களது மறைவு குறித்து. அவரது உறவினர் வடகோவை வரதராஜனின் உருக்கமான நினைவுப் பதிவு.
குண்டு மழையிலும் தாய் நிலத்தை விட்டு இடம்பெயராது / புலம் பெயராது பல ஆயிரம் கண்களிற்கு ஒளி கொடுத்த மனிதம் சிவபூமி உன்னதங்களை தொட உழைத்த மருத்துவர் குகதாசன் மண்ணை விட்டு சிவனடியில் பேரின்ப பெருவாழ்வு பெற நிரந்தரமாய் விடைபெற்றார்.
போர் காலத்தில் இம் மண்ணிற்கு துறைசார் பலரும் விடை கொடுத்து சென்ற போதும் மண்ணையும் மக்களையும் நேசித்து பல்லாயிரம் கண்களுக்கு ஒளி கொடுத்தவர் வைத்திய நிபுணர் குகதாசன்.
மன நலம் குன்றிய பிள்ளைகளின் நல்வாழ்விற்காய் சிவபூமியுடன் தன் ஒய்வு கால வாழ்வை பாரியாருடன் குடும்பமாக முழுமையாக அர்ப்பணித்த மருத்துவ நிபுணர் குகதாசன் மக்கள் சேவையை மகேசன் சேவையாகக் கண்டு அன்பே சிவத்திற்கு உயிர் கொடுத்த உத்தமர் .
அவரது உறவினர் வடகோவை வரதராஜனின் உருக்கமான நினைவுப் பதிவு.