பொருட்களின் விலையை உடனடியாகக் குறை என்பது அரசே பயங்கரவாதம் அல்ல!
19-9-2022
‘பொருட்களின் விலையை உடனடியாகக் குறை’ என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக நேற்று பிற்பகல் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், தோட்டத் தொழிலாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் எனப் பெருமளவானோர் பங்கேற்றனர்.
“கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசணம் எங்கே?”, “பால், முட்டை, இறைச்சி, மீன் ஆகியன அமைச்சர்களுக்கு மாத்திரமே”, “மக்கள் வீதியில்; சொகுசு வாகனம் அமைச்சர்களுக்கு”, “நாட்டுக்குப் பாரமான அமைச்சர்களின் வரப்பிரசாதங்களை இல்லாதொழி” போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.