உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா புதன்கிழமை மதியம் 1 மணியளவி்ல காலமானார். அவருக்கு வயது 77.
மதுரை மாவட்டம் சேடபட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி ரா.முத்தையா. இவர் 1945-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பிறந்தவர். தனது கடைசி காலத்தில் திமுகவில் இருந்து வந்தார். இவரது மகன் மணிமாறன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார்.
சேடப்பட்டி ரா.முத்தையா கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். 2000 வரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். அதனால், ஜெயலலிதா அதிமுக பொருளாராக சேடப்பட்டி ரா.முத்தையாவை நியமித்து அழகுப் பார்த்தார்.