திருகோணமலை மாவட்ட பெண் இலக்கிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து கலைத்துறைசார் வாண்மையை மேலும் முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் “ஒரு பொழுதில் ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட பெண் எழுத்தாளர்கள் ஆளுமைகளின் ஒன்றுகூடல் 03.09.2022 அன்று மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்ஷனின் தலைமையில் இடம்பெற்றது.
அங்கு உரையாற்றிய கவிஞரும் திருகோணமலை வரோதய நகர் பாரதி வித்தியாசாலை அதிபருமான திருமதி சுஜோதினி யுகராஜா (கவிஞர் சம்பூரணி) தனது உரையில் “இந்நிகழ்வில் எழுத்தாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, நிகழ்விற்கு பேச்சாளராக வருகை தந்திருந்ததிருமதி ஸ்ரீதேவி அம்மணி ஆசிரியை அவர்களை கௌரவிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்…
அத்தடன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசாரப் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்ஷன் அம்மணி அவர்களுக்கும், கலாசார உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
பிரபல எழுத்தாளர் திருமலை நவம் அவர்களும் உரையாற்றினார்.
( செய்தி- கவிஞர் நல்லை அமிழ்தன்)