தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மார்க்கம் பிராந்தியத்தில் பிராந்தியக் கவுன்சிலராக (Reginal Councilor) மீண்டும் போட்டியிடும் ஜிம் ஜோன்ஸ் அவர்கள் இந்த நகரசபை எல்லைக்குள் தனது கடந்த சேவைக் காலங்களில் நல்ல போக்குவரத்து, மற்றும் மார்க்கம் நகரத்தில் அமைய உள்ள யோர்க் பல்கலைக்கழகம், விளையாட்டு மையம், சமூக மையங்கள், நிலையான வளர்ச்சி ஆகியவற்றிற்காக கடுமையாக உழைத்து வருகின்றார். தொடர்ந்தும் அவர்கள் உழைப்பதற்கு தயாராக உள்ளார். ஜிம் ஜோன்ஸ் அவர்கள் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி ஆவார், மேலும் தற்போது ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுரங்கப்பாதையை வடக்கு நோக்கி விஸ்த்தரிக்கும் திட்டத்தைத் தொடங்கியவரும் இவரே.
மேலும். தமிழ் இனப்படுகொலையின் காரணத்தால் தங்கள் உயிர்களை இழந்த தமிழ் மக்களை ஞாபகப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைப்பதற்க்காக போராடியதன் காரணமாக கனடா வாழ் தமிழ் சமூகத்தால் நன்கு அறியப்பட்டவர்.
நமது குழந்தைகள் சிறந்த வாழ்க்கை மற்றும் கல்வியைப் பெற அயராது உழைக்கும் கடின உழைப்பாளியான ஜிம் ஜோன்ஸ் அவர்கள் தற்போதைய பிராந்திய கவுன்சிலர்களில் சிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்குத. ஜிம் ஒரு நியாயமான அங்கத்தவர்கள் கொண்ட மாநகர சபையை விரும்புகிறார், மேலும் மார்க்கம் நகர சபையிலும் பிராந்தியத்திலும் உங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஜிம் ஜோன்ஸ் அவர்களுக்கு வாக்களிக்க உங்களுக்கு வாய்ப்பு கிட்டி உள்ளது.
நீங்கள் வாக்களிக்கக்கூடிய 4 பிராந்திய கவுன்சிலர்கள் உள்ளனர், எனவே தயவு செய்து நல்லதோர் வேட்பாளரான ஜிம் ஜோன்ஸ் அவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்.
அவரது தொலைபேசி இலக்கம்;- 416 725 5930