இலண்டன் இரத்தினம் பவுண்டேசனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கோளாவில் கிராமத்தில் சிவனருள் கணினி தொழில் சார் பாடநெறி தொழிற்பயிற்சித்திட்டம் நடைமுறைப்படுகிறது
இக்கணனி நிலையமானது மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் Tertiary and Vocational Education Commission – TVEC கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது அப்பிரதேசத்தில் உள்ள க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளை எதிர்கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு அரச அங்கீகாரம் உள்ள NVQ தரச் சான்றிதழ்களை பெறுவதற்காகன ஓர் நிலையமாக அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
அதாவது NVQ 03 சான்றிழ்களுக்கான நான்குமாத கால Computer Application Assistance -CAA பயிற்சி நெறி மற்றும் NVQ 04 சான்றிதழ்களுக்குரிய ஜந்து மாத கால Computer Graphic Designer -CGD பயிற்சி நெறிகளும் நடைபெறுகின்றது.
இதன் படி 2022.05.04 தொடக்கம் 2022.09.10 ம் திகதி வரை நான்கு மாத காலங்கள் நடைபெற்ற Computer Application Assistance – CAA (NVQ 03) பயிற்சி நெறியை இனிதே நிறைவு செய்ய 25 பயிலுனர்களுக்கான நிறுவன சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2022.09.14 ம் திகதி கணினி நிலைய மண்டபத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளால் மற்றும் பெற்றோர்களால் இக்கணனி நிலையத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்பத்தும் இலண்டன் இரத்தினம் பவுண்டேசன் அமைப்பினருக்கும் அதனுடன் இணைந்து செயற்படும் நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டு இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.