மார்க்கம் பிரதேசத்தில் எங்கள் எதிர்காலத்தை நாம் இணைந்தே உருவாக்குவோம் –
கனடா நாட்டின் உயர் பெறுமானத்துக்குரிய முன்னரங்க நகரங்களில் மார்க்கம் முதன்மையானது என்றே கூறலாம். மார்க்கம் ஆற்றல் மிக்க பல்வகைப் பண்பாட்டு மரபுகளைக் கொண்ட பல்லின மக்கள் கூடி வாழும் பெருநகரமாகும். இங்கு வாழும் மக்கள் அரசியல் செயற்பாடுகளிலும் பங்குகொள்ள வேண்டும். நாம் அரசுகளுக்கு ஆண்டுதோறும் வரி செலுத்துகின்றோம். அந்த வரிகளைப் பயனுள்ளதாக்க வேண்டுமெனில் அரசியலிலும் ஈடுபாடு கொள்ள வேண்டும். மார்க்கம் பகுதியில் வாழும் பல்வகை இன மக்களையும் ஒன்றிணைத்து வலுவான சமூகத்தளத்தை உருவாக்கும் நோக்கில் நான் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றேன்.
எமது சுற்றாடலை மேம்படுத்துவதற்கும் வணிக வாய்ப்புகளைப் பெருக்குவதற்கும் மருத்துவமனைகளில் காணப்படும் காத்திருப்புக் காலத்தைக் குறைப்பதற்கும் எமது வரிப்பணத்தை மிகச் சிறப்பாக நிர்வகித்து சுகாதார பாதுகாப்புக் கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் அனவரும் பொருத்தமான வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த பிரதிநிதிகள் தேவை. இவர்கள் மக்களுக்கான நிலையான வலுவான பொருளாதாரதளத்தை உருவாக்க வல்லவர்களாக இருக்க வேண்டும். இத்தகையோரே அரசுகளின் சேவைகளையும் மக்களையும் சிறப்பாக இணைக்க வல்லவர் ஆவர். நான் மக்களுக்கான தொரு தொண்டனாகக் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசுகளின் சேவைகளுக்கும் மக்களுக்குமிடையே இணைப்புப் பாலமாக இயங்கி வருகின்றேன்.
என்னிடத்தே சமூகப்பணிகள் தொடர்பான நீண்ட வரலாறு உண்டு. கனடாவில் 93ம் ஆண்டிலேயே கலாபம் தொலைக்காட்சி வேவையை நடத்தி தமிழ்மக்களுக்கான ஊடகப் பணியாளனாக என் சேவையைத் தொடங்கிய நான், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிறந்த அரசியலாளர்களைப் பதவிகளில் இருத்துவதற்காகப பாடுபட்டு வருகின்றேன். இதன் விளைவாகவே மாநகரம், மாகாணம், மைய அரசு என்ற நிர்வாக அரச அலகுகளில் சிறந்தவர்கள் மக்களின் பிரதிநிதியாக இயங்கி வருகின்றார்கள். சிறந்த சேவையாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில் நான் சமூகத்தவரிடையே நிதி திரட்டும் பணிகளில் வெற்றிகரமாக ஈடுபட்டதுடன், அரச சேவைகள் மக்களைச் சென்றடைவதையும் உறுதி செய்துள்ளேன்.
கனடாவில் தமிழ் மக்களுக்காகத் தோன்றிய முதல் தொலைக்காட்சி ஊடகம் கலாபம். 1993இல் இதை உருவாக்கி நிர்வாகத் தயாரிப்பாளராக வெற்றிகரமாக நடத்தினேன். தமிழர் வணிகம் வளர்வதற்கு இத்தொலைக்காட்சி பேருதவி புரிந்தது. பல்வேறு இனங்களுக்காகத் தொலைக்காட்சி சேவைகளையும் உருவாக்கினேன். பல்வகை இனங்களின் கலை, பண்பாடு என்பவற்றை இந்த பன்முகப் பண்பாட்டுச் சூழலில் மேம்படுத்துவதற்காக நான் என்னுடைய நிபுணத்துவத்தையும் பரந்துபட்ட அனுபவத்தையும் பயன்படுத்தினேன். பன்முகப் பண்பாட்டுத்தளங்களைக் கொண்டிருக்கும் இனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கான பாலமாகவும் இயங்கினேன். இப்போதும் இனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றிணைந்து வலுவான சமூகமான இயங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். நான் சந்திக்கும் அனைவரினதும் நம்பிக்கைகளையும் உறுதிகளையும் நான் வெகுவாக மதிக்கின்றேன்.
இக்கருத்துகளை நம்பிக்கையோடு வலியுறுத்தி வருகின்றேன்.
நான் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடனும் இலாப நோக்கற்ற சமூகசேவை அமைப்புகளுடனும் இணைந்து கடும் உழைப்புடனும் சுறுசுறுப்புடனும் பணியாற்றி வருகின்றேன். வெறுமனே பேச்சளவில் இல்லாமல் அவர்களிடையே ‘செயல் வீரன்’ என்ற பெயரைப் பெற்றிருக்கின்றேன். நான் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகக் கடினமாகக் குரல் கொடுத்து வந்திருக்கின்றேன். என் நேரம் உட்பட, என்னால் முடிந்த அனைத்தையும் இப் பணிகளுக்காகச் வழங்கியிருக்கின்றேன்.
நான் இப்போதும் பல தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இலாபநோக்கற்ற அமைப்புகள் பலவற்றின் உறுப்பினராகவும் இயங்கி வருகின்றேன். பயன்கருதாத இவ்வகைத் தன்னார்வத் தொண்டுப்பணிகளில் ஈடுபடுவதில் நான் உள்ளம் நிறைவடைவதோடு பெருமகிழ்ச்சியும் அடைகின்றேன்.
அன்பான உறவுகளே!
நானும் உங்கள் பிரதிநிதியாக மார்க்கம் மாநகரசபையில் இணைந்து செயலாற்ற இதுவே பொருத்தமான தருணம் எனக் கருதுகின்றேன். பொருளாதாரமும் வாழ்வும் பல சவால்களை எதிர்நோக்கியிருக்கும் இக்காலத்தில் சமூக மேன்மைக்காகப் போராடவல்ல உங்களுக்கு நெருக்கமான ஒருவரே உங்களுக்கான பிரதிநிதியாக முடியும். மார்க்கத்தில் மக்களோடு நெருங்கி பணியாற்றவல்ல கீழ்நிலை மக்கள் பிரதிநிதி தேவை. மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. இதுவே மாற்றத்திற்கான பொருத்தமான நேரம். என்னை மார்க்கம் பிரதேச சபை உறுப்பினராக தேர்வுசெய்து (Markham Regional Councilor) மிகச் சிறந்த சேவையை ஆற்றுவதற்கான ஒரு வாய்ப்பை எனக்கு தாருங்கள்.
தற்போது நான் ஆற்றிவரும் பணிகள் சில:
• தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)
Ceylon Broadcasting inc,(TVCEYLON & TV Kallapam) Kallapam TV production Inc. Tamil Cultural Television Network and South Asian Multicultural Association. 2022
• சபை உறுப்பினர்
Federal and Provincial Conservative Party Riding association of Markham-Unionville and Markham-Thorn hill. 2022
• தலைவர் – Tamil Canadian Conservative Association Canada .2022
• உப தலைவர் -“Human Endeavour”• Committed to social and economic change in York Region. 2022.
• உப தலைவர் – International Movement for Tamil Culture Canada.
• இயக்குனர் குழு உறுப்பினர் – Durham Manor, Ajax & Pickering, new business development.
• இயக்குனர் – Foundation & Fundraising Board – Humber River Hospital foundation
• board for Sri Lankan communities.
• முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர் – Milliken Mills Lions Club – Markham, Ontario.
• முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர் – Settlement Assistance & Family Support Service (SAFSS) Scarborough
• முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர் – Canadian Tamil Chamber of Commerce.
ஸ்ரீனியை ( Srini)தேர்ந்தெடுப்பதன் வாயிலாக மார்க்கத்தில் எங்கள் சிறப்பான எதிகாலத்தை நாமே கட்டமைப்போம்