(மன்னார் நிருபர்)
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட தோட்டச் செய்கை இன் உற்பத்திப் பொருட்களின் அறுவடை நிகழ்வு 4ம்திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன் போது மன்னார் இரணை இலுப்பை குளத்தில் இஞ்சி அறுவடை விழா நடைபெற்றது.
பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.
மேலும் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் (விரி) எஸ். உதயச்சந்திரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் க. மகேந்திரன், மன்னார் மாவட்ட செயலக பிரதான கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன் ஆகியோரும் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இரணை இலுப்பை குளத்தைச் சேர்ந்த விவசாயிக்கு விவசாய திணைக்களம் வழங்கிய தூவல் நீர் பாசன உபகரணம் தொகுதியின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.
-மேலும் வெங்காயம்,பூசணிக்காய் ,கச்சான் கடலை,மிளகாய் உள்ளிட்டவையும் அறுவடை செய்யப்பட்டது.