முல்லைத்தீவு மாவட்ட செயலக 2022ம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாட்டில் இன்று (05) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ( காணி) எஸ். குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் கலந்து சிறப்பித்தார்.
கடந்த 26ம் திகதி காலை நவதானிய பூரண கும்பம் வைத்தலுடன் பக்தி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நவராத்திரி நிகழ்வு இன்றைய தினம் கும்பசரித்தலுடன் நிறைவு பெற்றது.
பூஜை வழிபாடுகளை குமுழமுனை ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பிரதம குருக்கள் ஸ்ரீல ஸ்ரீ சம்பந்தன் குருக்கள் நிகழ்த்தினார்.
மேலும் இதன்போது அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து மாவட்ட செயலக பிரதம கணக்காளரின் சிறப்புரை, உத்தியோகத்தர்களின் நடனம், தனிப்பாடல்கள், பட்டிமன்றம், கவிதை போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
இந் நிகழ்வில் மேலதிக மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மாவட்ட பொறியியலாளரும் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்க தலைவருமான எஸ்.கஜந்த், பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் என பலரும் பக்தி பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர்.