(06-10-2022)
வீதியில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது வேன் மோதிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கண்டி முல்கம்பலா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் வீதியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி ஹீரஸ்ஸகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் அவரது சகோதரர் மற்றும் தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.