தெல்லிப்பழையில் ஏற்பட்ட இடி மின்னல் காரணமாக 34 வயது விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
அப்படி உயிரிழந்தவர் தெல்லிப்பழையைச் சேர்ந்த மகாலிங்கம் ராகவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை அம்பனைப் பகுதியில் இன்று (6) வியாழன் காலை ஏற்பட்ட மழைப் பொழிவின்போது இடி மின்னல் தாக்கமும் காணப்பட்டது.
இவ்வாறு காணப்பட்ட இடி மின்னல் தாக்கத்தின்போது தனது தோட்டத்தில் நின்று பணியாற்றிய மகாலிங்கம் ராகவனை இடி மின்னல் தாக்கியுள்ளது.
இதனையடுத்து தாக்கத்திறகு இலக்கான அவர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு சென்ற சமயம் அவரை வைத்தியர் பரிசோதித்த வைத்தியர்கள் ஏறகனவே அவர் உயிரிழந்திருந்ததை உறுதி செய்தனர்.
உயிரிழந்தவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் குறைந்தது 40 பேர் மின்னல் தாக்குதலில் பலியாகின்றனர் என்று அரச வானிலை அவதானிப்பு தினைக்களம் கூறுகிறது.