கிறிக்கெட் விளையாட்டை முக்கியமாகக் கொண்டு கனடாவில் உள்ள இலங்கைப் பாடசாலைகளின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பெற்ற தனித்தனியான கிறிக்கெட் அணிகளுக்கிடையே நடத்தப்பெறுகின்ற சுற்றுப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த வகையில் கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் Union Sports Federation of Canadaவிளையாட்டு அமைப்பு நடத்திய வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள விழா மண்டபம ஒன்றில் நடைபெற்றது.
கனடாவில் இயங்கிவரும் சுமார் 21 கிறிக்கெட்ட விளையாட்டுக் கழகங்கள் இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றின.
இந்த சுற்றுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய கிறிக் கெட் கழகங்களுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் விழாவிற்கு முக்கிய அணுசரனையாளர்களான திருவாளர்கள் சங்கர் நல்லதம்பி மற்றும் அரவிந்த் ஆகியோர் வெற்றியாளர்களுக்கு வழங்கிக் கௌரவித்தனர்.
மார்க்கம் நகரபிதா பிராங்க் ஸ்கெப்பற்றி அவர்களும் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டு கேடயங்களை வழங்கிக் கௌரவித்தனர்.