பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இதுவரைகாலம் பொலீஸ் காவலரனாக செயற்பட்டு வந்த கிளிநொச்சி இராமநாதபுரம் பொலீஸ் காவலரன் பொலீஸ் நிலையமாக மாற்றப்பட்டு இன்று முதல் செயற்பட தொடங்கியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் 7வது பொலீஸ் நிலையமாகவும் வடமாகாணத்தில் 61 வது பொலீஸ் நிலையமாகவும் இது அமைந்துள்ளது.
பொலீஸ்மா அதிபர் திரு. C.D விக்கிரமரத்ன அவர்களின் வழிகாட்டலின் பேரில் கிளிநொச்சி பொலீஸ் சிடேஸ்ர அத்தியச்சகர் திரு. M.K.R.A குணரத்ன அவர்களில் அழைப்பின் பேரில் கிளிநொச்சி மாவட்ட பொலீஸ் அத்தியச்சகர் திரு.H.சமுத்திர ஜீவன் அவர்களின் பங்களிப்புடன் வடமாகாண சிரேஸ்ட பொலீஸ்மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரிய அவர்களினால் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது .
இன் நிகழ்வில் கிராமசேவையாளர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்