மன்னார் நிருபர்
(10-10-2022)
ஓய்வுபெற்ற வடமாகாண முன்னை நாள் பிரதம செயலாளர் அ. பத்திநாதன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) மன்னார் மாதோட்டம் புலவர் கீர்த்தாம் பிள்ளை கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(9) நானாட்டான் டிலாசால் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது ஓய்வு பெற்ற முன்னை நாள் வடமாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது,
அதனைத் தொடர்ந்து மன்னார் மாதோட்டம் புலவர் கீர்த்தாம் பிள்ளை கலாமன்றத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக ‘பாதுகை’ என்ற குறுங்கூத்து செழுங்கலை வித்தகர் விமலநாதன் அவர்களின் எழுத்துருவாக்கத்தில் அண்ணாவியார் ச. ஆசைப்பிள்ளை ( அதிபர்) அவர்களின் நெறியாள்கையில் கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்,பங்குத்தந்தை அருட்சகோதரர்,கலைஞர்கள்,மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.